ஈராக்கில் அடுத்தடுத்து ஆறு குண்டுத்தாக்குதல் : ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயலா?

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

இலங்கையை அடுத்து ஈராக்கிலும் நேற்று அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆறு குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிர்குக் பகுதியிலேயே நேற்று இரவு குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக்குண்டுத்தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 20-ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த குண்டுத்தாக்குதல் சில மணித்தியால இடைவெளியில் இந்த குண்டுத்தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிர்குக் நகர பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளார்.

குறித்த குண்டுத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த குண்டுத்தாக்குதல்களுக்கு இதுவரையில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் இது ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...