அரைகுறை ஆடையுடன் இருந்த ஆண் - பெண் 30 பேர்: சுற்றிவளைத்த பொலிசார்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரான் நாட்டில் தனியாருக்கு சொந்தமான மையம் ஒன்றில் யோகா பயிற்சி மேற்கொண்ட பெண்கள் உள்ளிட்ட 30 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஈரானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Gorgan நகரில் யோகா மையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.

திடீரென்று அந்த மையத்தில் நுழைந்த பொலிசார், அங்கிருந்த ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட 30 பேரை சுற்றி வளைத்துள்ளனர்.

யோகா பயிற்சி என்பதால், அந்த 30 பேரும் அரைகுறை ஆடைகளுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த 30 பேரையும் கைது செய்த பொலிசார், அவர்களை பிராந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், யோகா வகுப்புகளை மேற்கொள்ள அந்த ஆசிரியர் சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்ததாகவும்,

ஆனால் அரசிடம் இருந்து உரிய அனுமதி பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஈரான் கலாச்சாரத்துக்கு உரிய ஆடைகளை கைதான 30 பேரும் அணிந்திருக்கவில்லை எனவும்,

கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளதாக நீதிமன்ற தரப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டில் யோகா பயிற்சிகளுக்கு அனுமதி உள்ளது என்றாலும், இருபாலருக்கும் ஒன்றாக வகுப்புகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers