பதவி விலகுகிறேன்.. பிரதமர் பீட்டர் ஓநீல் அதிரடி அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

பப்பு நியூ கினியா பிரதமர் பதிவியிலிருந்து விலகுவதாக பீட்டர் ஓநீல் அறிவித்துள்ளார்.

பப்பு நியூ கினியாவில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்கட்சிக்கு தாவியதை அடுத்து எழுந்த நெருக்கடியால் பீட்டர் ஓநீல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பீட்டர் ஓநீலின் எதிர்கட்சியினர் கூறியதாவது, பிரதமர் பதவியிலிருந்து பீட்டர் ஓநீலை அகற்றுவதற்கு போதுமான ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம். பிரான்சின் டோட்டல் உடனான எரிவாயு ஒப்பந்தம் உட்பட பலவிதமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் கேள்வி எழுப்பினோம் என தெரிவித்துள்ளனர்.

ராஜினாமா குறித்து பேசிய பீட்டர் ஓநீல், தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் மாற்றம் தேவை, இதுவே ராஜினாமாவிற்கு காரணம் என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரை பதவியை சர் ஜூலியஸ் சான்யிடம் ஒப்படைத்துள்ளார். ஜூலியஸ் சான் மூன்றாவது முறையாக பிரமராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers