இந்தோனேசியாவில் புதிய அதிபருக்கு எதிராக வெடித்தது வன்முறை... பெருமளவில் சேதம்: 6பேர் பலி

Report Print Abisha in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் அதிபர் தேர்தலில் வெற்றி குறித்து எழுந்த எதிர்ப்பால் எற்பட்ட வன்முறையில் பலர் காயம் அடைந்ததுடன் பொருட்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இது நாடுமுழுவதும் ஒரேகட்டமாக நடைபெற்றதால், இதுதான் உலகிலேயே பெரிய தேர்தல் என்ற புகழும் பெற்றது.

இந்நிலையில், தற்போதைய அதிபர் ஜோகோ விடோடா வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக பிரபாவோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் காரணமாக, அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தகவல் வெளியானது. இதனால் முன்னெச்சரிக்கைகள் மேற்கொண்ட பொலிசார், தலைநகர் ஜகார்த்தாவில் மட்டும் 3000 பேர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஜோகோ விடோடோவின் வெற்றியை எதிர்த்து தலைநகர் ஜகார்த்தாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள், கண்டன பேரணிகள் தொடங்கப்பட்டது. முதலில் அமைதியாக போராட்டம் நடைபெற்றது. நேரம் செல்லச் செல்ல பெரிய வன்முறையாக மாறியது.

வாகனங்களுக்கு தீவைத்தும், போலீசார் மீது பட்டாசுகளை கொளுத்திப் போட்டும் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர். இதனால் பதற்றம் உருவாகியது.இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

மேலும், இந்த வன்முறையின்போது 6 பேர் பலியானதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியானது. வன்முறை தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வன்முறை பரவாமல் இருக்க பொலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers