வெளிநாட்டில் குடும்பத்துடன் கோடீஸ்வரராக வாழ்ந்த ஆசிய நாட்டவர் தற்போது கூலி வேலை செய்யும் பரிதாபம்... வெளியான பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சார்ஜாவில் குடும்பத்தாருடன் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த நபர் கோடீஸ்வரராக இருந்த நிலையில் தற்போது கூலி வேலை செய்து குடும்பம் நடத்த கஷ்டபடுவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் அஸ்கர் ஹுசைன். இவர் தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் 12 ஆண்டுகளுக்கு முன்னர் சார்ஜாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

தொழிலதிபராகவும் கோடீஸ்வரராகவும் வலம் வந்த அஸ்கரை சில வருடங்களுக்கு முன்னர் நபர் ஒருவர் அவரின் கையெழுத்தை போலியாக போட்டு ஏமாற்றினார்.

பின்னர் அந்த நபர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டார். அந்த கையெழுத்தால் அஸ்கர் மற்றும் அவர் குடும்பத்தாரின் தலையெழுத்தே மாறியது.

தன்னுடைய மொத்த சொத்துக்களையும் இழந்ததோடு அஸ்கர் கடனாளியாகவும் மாறி போனார். தற்போது அஸ்கரின் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுக்கு 15லிருந்து 23 வயது வரை ஆகிறது.

பள்ளிக்கூட கட்டணத்தை கூட செலுத்த முடியாததால் அஸ்கர் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள்.

மாளிகை போன்ற பிரம்மாண்ட வீட்டில் இருந்த அஸ்கர் குடும்பம் தற்போது சிறிய வீட்டில் இருக்கிறார்கள்.

அஸ்கரும் அவர் மகனும் குப்பை கிடங்கில் கூலி வேலை செய்து வரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து அஸ்கர் கூறுகையில், எங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. எங்களின் விசா காலம் முடிந்துவிட்டதால் சட்டத்துக்கு புறம்பாக இங்கு வசிப்பதாகவே நாங்கள் அரசாங்கத்தால் பார்க்கப்படுகிறோம்.

ஊரில் என் தாய் மற்றும் என் மனைவியின் பெற்றோர் இறந்தபோது கூட எங்களால் அங்கு போகமுடியவில்லை.

என்ன பிரச்சனை வந்தாலும் நான் யாரிடமும் பணத்துக்கு பிச்சையெடுக்க மாட்டேன், கூலி வேலை செய்து என் குடும்பத்தை காப்பாற்றுவேன் என கூறியுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் சங்கம் உதவி செய்யும்.

ஆனால் அஸ்கர் சட்டவிரோதமாகவும், சரியான ஆவணங்கள் இல்லாமலும் வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு உதவி செய்ய சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers