400-க்கும் அதிகமானவர்களுக்கு எச்.ஐ.வியை பரப்பிய மருத்துவர்: சோகத்தில் மூழ்கிய கிராமம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தெற்கு பாகிஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் 400க்கும் அதிகமான பொதுமக்கள் எச்.ஐ.வி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் இருக்கும் வசாயோ என்கின்ற கிராமத்தில் 400க்கும் அதிகமான பொதுமக்கள் எச்.ஐ.வி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அங்கு 5 இடங்களில் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோகமான முகத்துடனே பொதுமக்கள் பலரும் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

இதில் பெரும்பாலும் குழந்தைகளே பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அச்சத்தில் உறைந்திருக்கும் கிராம மக்கள், தங்களுடைய குழந்தைகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொடூரமான நோயினை பரப்பியதாக உள்ளூர் மருத்துவர் முசாஃபர் கங்காஹரோ கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கும் நிலையில், திட்டமிட்டு நோய்த்தொற்றை பரப்பியுள்ளாரா என பொலிஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers