112 உயிரை பலி வாங்கிய விமான விபத்து.. காரணம் இது தான்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கியூபாவில் 2018 ஆம் மே மாதம் ஹவானாவில் இடம்பெற்ற விமான விபத்திற்கான காரணத்தை கியூபன் சிவில் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2018ம் ஆண்டு மெக்ஸிக்கோவின், குளோபால் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கியூபாவின் தலைநகரான ஹவானா விமான நிலையத்திலிருந்து ஹொல்கூன் புறப்பட்டது. விமானம புறப்பட்ட சில நொடிகளிலே விபத்துக்குள்ளானது. இதில், 112 பேர் உயிரிழந்தனர்.

விபத்திற்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை, ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொள்ளும் என கியூபா ஐனாதிபதி மிகுவல் டயஸ்-கேனெல் உத்தரவிட்டார்.

எனினும், மெக்ஸிக்கோ விமான போக்குவரத்து அதிகாரிகளும், கியூபா அதிகாரிகளும் கூட்டாக ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன்போது விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவான தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இறுதியில், விமானத்தின் எடை மற்றும் மையத்தை கணக்கிடுவதில் ஏற்பட்ட பிழை காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானது என விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்து இரண்டு மாதங்களுக்கு பின் ஜூலை மாதம் மெக்சிகன் விமான நிறுவனமான குளோபல் ஏர் விபத்திற்கு மனித தவறே காரணம் என கண்டறிந்தது.

அதில், விமானக்குழுவினர் மிகவும் செங்குத்தான கோணத்தில் விமானத்தை பறக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், விமானத்தால் பறக்க இயலாததால் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என குளோபல் ஏர் நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்