வெளிநாட்டில் வாழும் இந்தியரின் வலது கையை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவு... அவர் செய்த குற்றம் என்ன?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் பணத்தை திருடிய வழக்கில் கேரளாவை சேர்ந்த இளைஞரின் வலது கையை துண்டிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவின் ஆபா நகரில் உள்ள உணவகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அந்த கேரள இளைஞர் சுமார் 1.1 லட்சம் ரியாலை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கேரள இளைஞரை சவுதிக்கு அழைத்து வந்த அவர் நண்பர், திருட்டு போன பணத்தை தான் கொடுத்து விடுவதாக உத்தரவாதம் அளித்த நிலையில் அவரால் அதை தர முடியவில்லை.

பின்னர் பொலிசார் கேரள இளைஞர் அறையில் இருந்து திருடிய பணத்தை கைப்பற்றினார்கள்.

இது தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடந்து வந்த நிலையில் கேரள இளைஞரின் வலது கையைத் துண்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், மே 22-ம் திகதி வரை மேல் முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...