நாய்க்கு பெயர் வைத்ததற்காக கைதான நபர்: அப்படி என்ன பெயர் வைத்தார் தெரியுமா?

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் சட்டத்திற்கு புறம்பான பெயர்களை நாய்களுக்கு வைத்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான பேன் என்கிற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன்னுடைய இரு நாய்களுக்கும் `Chengguan, Xieguan' என பெயர் வைத்துள்ளார்.

அதனை சமூகவலைத்தள பக்கமான WeChat-லும் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவானது பொலிஸாரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, உடனடியாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இளைஞரை கைது செய்தனர்.

சீனாவில் `Chengguan' என்றால் நகர்ப்புறங்களில் சிறிய குற்றங்களைக் கண்காணிப்பவர்களைக் குறிக்கும். `Xieguan' என்றால் டிராஃபிக் அதிகாரிகள் போன்றவர்களைக் குறிக்கும்.

நாய்களுக்கு இப்படி பெயர் வைத்து, சட்ட அமலாக்க அதிகாரிகளை அவமானப்படுத்தியதால் தற்போது இளைஞருக்கு 10 நாட்களுக்கு சிறப்புக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்ளூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள பேன், இது சட்டவிதமானது என்பது எனக்கு தெரியாது. நான் விளையாட்டிற்காக தான் அப்படி வைத்தேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்