13 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் நபர்.. மொத்தம் எத்தனை குழந்தைகள் தெரியுமா? வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 13 மனைவிகள் மற்றும் 84 குழந்தைகள் உள்ள நிலையில் அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

அப்துல் ரகுமான் என்பவரை வெளிநாட்டு நிருபர் ஒருவர் பேட்டி எடுக்க சென்றார்.

பேட்டி எடுக்கும் அளவுக்கு அவர் செய்த சாதனை என்ன பலரும் கேட்கலாம், ரகுமானுக்கு மொத்தம் 13 மனைவிகள் மற்றும் 84 குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தான் ஆச்சரிய தகவல்.

ரகுமானுக்கு ஒரு கால் இல்லை என்ற நிலையிலும் 13 மனைவிகளுடன் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

அந்த வீட்டில் ஆங்காங்கே சிறுவர், சிறுமியர் கூட்டம் விளையாடி கொண்டுள்ளது. பெண்கள் அந்த பெரிய வீட்டிற்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் கையில் கைக்குழந்தை கூட இருக்கிறது.

பேட்டி எடுக்க வந்தவர் இதையெல்லாம் பார்த்து திகைத்தே விட்டார். உங்களுக்கு 13 மனைவிகளா, எனக்கு ஒரு மனைவி தான் என்று நிருபர் சொல்லவும், ரகுமார் ஷாக் ஆகிவிட்டார்.

என்ன உங்களுக்கு ஒரு மனைவி தானா? என கேட்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்