ஓடும் காரின் கண்ணாடி முன் எட்டிப்பார்த்த பாம்பு: ஒரு சுவாரஸ்ய வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப்பெண் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது தனது கார் கண்ணாடி முன் ஏதோ எட்டிப்பார்ப்பதை கவனித்தார்.

முதலில் அது ஏதோ ரப்பர் குழாய் என்று நினைத்த Cassandra Tan (36) என்னும் அந்த பெண்ணுக்கு, பின்னர் அது பாம்பு என்று தெரிந்ததும் பயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர் தனது கணவருக்கு போன் செய்து தகவலை சொல்ல, முதலில் அவர் நம்பவில்லை.

எனவே பாம்பை வீடியோ எடுத்த Cassandra, அதை தனது கணவருக்கு அனுப்பியுள்ளார்.

வீடு வந்து சேர்ந்த Cassandraவும் அவரது கணவரும் உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் அந்த பாம்பை பிடித்து ஒரு பெட்டியில் அடைத்து வைத்துவிட்டு வன விலங்குகள் பூங்காவிற்கு தகவல் அளித்துள்ளார்கள்.

தான் அந்த பாம்பை கொல்ல விரும்பவில்லை என்றும், உயிருடன் அதை ஒப்படைக்க வேண்டும் என்றே விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார் Cassandra.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்