பெண்களை பார்த்தால் கைது: ரமலானை ஒட்டி ஈரானில் கடுமையான கட்டுப்பாடுகள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரமலான் மாதத்தில் பெண்களை பார்த்தால் கூட ஆண்கள் கைது செய்யப்படுவார்கள் என ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் நோன்பிருக்கும் நேரத்தில் பொது இடங்களில் யாராவது சாப்பிடவோ, தங்கள் கார் ரேடியோவில் இசை ஒலிக்கவோ செய்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஈரான் நீதித்துறை அறிவித்துள்ளது.

பெண்கள் ஹிஜாப் அணிவதில் முன்னை விட அதிக கவனம் செலுத்த வேண்டும், ஆண்கள் தங்களை கடந்து செல்லும் பெண்களை பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் நீதித்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரமலானின்போது இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் குற்றம் செய்தவர்களாக கருதப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றார் அவர்.

சமீபத்தில் பள்ளி மாணவிகள் சிலர் பாப் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வீடியோக்கள் கவனத்திற்கு வந்ததையடுத்து இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அந்த வீடியோவில் நடனம் ஆடும் மாணவிகள் எந்த பள்ளியை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஈரானின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஈராக்கில், ஏற்கனவே 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்