ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: பாதிரியார் உட்பட 6 பேர் பலி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பாசோ நாட்டில், வழிபாட்டின் போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பர்கினா பாசோ நாட்டின் Dablo பகுதியில் உள்ள உள்ள தேவாலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நடந்துகொண்டிருந்துள்ளது.

அப்போது துப்பாக்கிகளுடன் வந்த 20 முதல் 30 பேர் கொண்ட குழு திடீரென தேவலயத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

காலை 9 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த பாதிரியார் உட்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் தேவாலயம் மற்றும் அருகாமையில் இருந்த கடைகளை தீ வைத்து எரித்துவிட்டு, பயங்கரவாதிகள் அங்கிருந்து கிளம்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சிறிய வடக்கு நகரமான சில்லாட்ஜி பகுதியில் உள்ள ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers