போனில் விளையாடிய தாய்...லொறிக்கு அடியில் சிக்கி உயிரிழந்த குழந்தை: வெளியான வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் தாய் போனில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் குழந்தை லொறிக்கு அடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

சாமுத் பிரகான் பகுதியில் வசித்து வரும் நொன்டாவாட் சைங்கம் என்ற ஆண் குழந்தையே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்து 32 வயதான குழந்தையின் தாய் வில்வான் பீப்பான் கூறியதாவது, சம்பவத்தின் போது நான் என் தங்கையுடன் போனில் மேசேஜ் செய்துக்கொண்டிருந்தேன்.

குழந்தை வீட்டின் முன் பக்கம் விளையாடிக்கொண்டிருந்தான், தீடீரென பார்த்தபோது குழந்தை காணாமல் போய், வீட்டின் முன் வாயில் திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். உடனே சாலைக்கு சென்று பார்தத போது குழந்தை லொறிக்கு அடியில் சிக்கி கிடந்தான்.

மயங்கிய நிலையில் இருக்கிறான், அவசர உதவிக்கு அழைத்தால் அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள் என நினைத்தேன். ஆனால், அவன் உயிழந்து விட்டான். நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும், என் கவனக்குறைவால் தான் இவ்விபத்து நேரிட்டது என மனம் வருந்தி கூறியுள்ளார்.

குழந்தையில் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்