சிறுவன் போன்ற தோற்றம் கொண்ட இளைஞரை திருமணம் செய்த அழகிய இளம்பெண்... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் சிறுவன் போன்ற முகம் மற்றும் உடல் தோற்றம் கொண்ட 19 வயது இளைஞர் அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

ஜோனா என்பவருக்கு வயது 19, ஆனால் பார்ப்பதற்கு சிறுவன் போன்ற முகம் மற்றும் உடலமைப்பு கொண்டவராக அவர் உள்ளார்.

விசித்தர நோய் காரணமாக ஜோனா இப்படி இருப்பதாக கூறப்பட்டாலும் அவருக்கு என்ன நோய் என தெரியவில்லை.

இந்நிலையில் அழகிய இளம்பெண் ஒருவருக்கும், ஜோனாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமண கொண்டாட்டம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஜோனாவும், அவர் மனைவியும் நடனம் ஆடுகிறார்கள். பின்னர் குள்ளமாக இருக்கும் ஜோனா சேர் மீது ஏறி நின்று மனைவிக்கு முத்தம் கொடுக்கிறார்.

இதன்பின்னர் தம்பதிகள் கட்டி பிடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போல வீடியோவில் உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...