காது வலிக்காக மருத்துவரிடம் சென்ற நபர்.. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி! வைரலான வீடியோ

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சீனாவில் நபர் ஒருவரின் காதை பரிசோதித்தபோது, சிலந்தி ஒன்று வலை பின்னி வாழ்ந்து வந்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

சீனாவின் ஜியான்சூ மாகாணத்தைச் சேர்ந்த லி என்பவருக்கு, சில நாட்களாகவே தனது காதில் எரிச்சல், வலி மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன. ஒருவேளை காதை சுத்தம் செய்யததால் இந்த பிரச்சனைகள் இருக்கிறதோ என்று நினைத்த லி, தனது காதுகளை சுத்தப்படுத்தியுள்ளார்.

அதன் பிறகு எரிச்சல் மற்றும் அரிப்பு நிற்கவில்லை. இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற லி-யை மருத்துவர்கள் பரிசோதித்தனர். முதலில் காதில் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், அரிப்பு மீண்டும் ஏற்படவே, அவரது காதுக்குள் மைக்ரோஸ்கோப் மூலம் மருத்துவர் சோதனை செய்தார். அப்போது அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. லி-யின் காதில் சிலந்தி ஒன்று இருந்தது மட்டும் இல்லாமல், அது அவரது காதினுள் வலை பின்னியும் வாழ்ந்து வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, லி-யின் காதுக்குள் உப்பு கலந்த நீரை சில துளிகளை மருத்துவர் ஊற்றியுள்ளார். அதைத் தாங்க முடியாத சிலந்தி, உயிருடன் வெளியில் வந்துள்ளது. இந்நிலையில் லி-யின் காதில் சோதனை செய்யப்பட்ட வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers