குடியேறிகளுடன் கடலில் மூழ்கிய கப்பல்: 70க்கும் மேற்பட்டோர் பலி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

லிபியாவிலிருந்து ஐரோப்பாவை அடைய முயன்ற கப்பல் கடலில் மூழ்கியதில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

லிபியாவிலிருந்து ஏராளமான குடியேறிகள் கப்பல் மூலம் ஐரோப்பாவிற்கு புறப்பட்டுள்ளனர். துனிசியா நாட்டிலிருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள மத்தியதரைக் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கப்பல் கடலில் மூழ்கியிருந்தது.

இதில் 16 பேர் மட்டுமே உயிர்பிழைத்துள்ளனர். துனிசிய மீனவர்கள் அவர்களை கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் கப்பலில் பயணித்த 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற குடியேறிகளின் பலரும் இதுபோன்று கடலில் மூழ்கி இறந்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்த ஆண்டு ஐரோப்பாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரில் மிகப்பெரிய கப்பல் விபத்து இது எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்