ஆப்பரிக்காவில் பிரான்ஸ் வீரர்கள் பலி..அமெரிக்கர் உட்பட 4 பணயக் கைதிகள் விடுவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

தென் ஆப்பரிக்கா நாடான பர்கினா பாசோவில் 10 நாட்களாக பணயக் கைதிகளாக கடத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பிரான்ஸ் நாட்டினர் உட்பட நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே 1ம் திகதி பெனின் பகுதியில் இரண்டு பிரான்ஸ் நாட்டவர் உட்பட நான்கு பேர் கடத்தப்பட்டு பணயக் கைதிகளாக வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மே 10 அன்று பணயக் கைதிகளை மீட்க பிரஞ்சு சிற்ப்புப்படைகளால் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில், நான்கு பணய கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். இராணுவ நடவடிக்கையில் ஈடுப்பட்ட Cédric Pierrepont, Alain Bertoncello என்ற இரண்டு பிரஞ்சு வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.

பத்து நாட்களாக கடத்தப்பட்டு பணய கைதிகளாக இருந்த அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த Patrick Picque, Laurent Lassimouillas ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உயிர் தியாகம் செய்த வீரர்களின் தைரியத்திற்கு மொத்த நாடும் தலை வணங்குவதாக பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பாலி தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்