41 பயணிகளை பலிவாங்கிய விமான விபத்தை விமர்சித்தவர் மர்ம மரணம்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் 41 பயணிகளை காவுவாங்கிய விமான விபத்து தொடர்பாக ஜனாதிபதி புடினை கேள்வி கேட்ட பத்திரிகையாளரின் மர்ம மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பிரபல பத்திரிகையாளரில் ஒருவரும் ஜனாதிபதி புடினை கடுமையாக விமர்சனம் செய்து வருபவருமான 59 வயது செர்ஜி டொரெங்கோ என்பவரே சாலை விபத்தில் கொல்லப்பட்டவர்.

Govorit Moskva என்ற தனியார் வானொலியில் முதன்மை ஆசிரியராக பணியாற்றிவரும் செர்ஜி, சம்பவத்தின்போது பரபரப்பான சாலையில் தமது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்து இறந்துள்ளார்.

இவர் மீது எந்த வாகனமும் மோதவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி சம்பவயிடத்திலேயே மரணமடைந்த செர்ஜியை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் உடற்கூறு ஆய்வுகள் முன்னெடுக்கப்படாமலையே, செர்ஜியின் மரண காரணம் இதுவென அரசு மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி புடினின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் கடுமையான விமர்சனம் முன்னெடுத்துவரும் செர்ஜி,

சில நாட்களுக்கு முன்னர் 41 பேரை காவு வாங்கிய ரஷ்ய விமான விபத்தை அரசு மூடி மறைக்க முனைவதாக குற்றாஞ்சாட்டியிருந்தார்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் 118 பேர் கொல்லப்பட்ட ரஷ்யா நீர்மூழ்கி கப்பல் விபத்து தொடர்பில் விமர்சனம் செய்த செர்ஜி, அப்போது அவர் பணியாற்றிய செய்தி ஊடகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்