வாரத்தில் ஒரு நாள் மருத்துவர்... ஆறு நாட்கள் அரசுவேலை: வியக்கவைக்கும் ஒரு நாட்டின் பிரதமர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தெற்கு ஆசியாவின் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது பூடான் நாட்டின் பிரதமர் லோதே ஷெரிங் ஏழை எளிய மக்களுக்காக மருத்துவர் பணியையும் மேற்கொண்டு வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பூடான் நாட்டின் பிரதமராக பணியாற்றிவரும் லோதே ஷெரிங், வாரத்தில் ஆறு நாட்கள் அரசுத் தொடர்பான வேலைகளைக் கவனிக்கிறார்.

வார இறுதியில் சனிக்கிழமையானால் அந்நாட்டில் உள்ள தேசிய மருத்துவமனையில் மருத்துவராகவும் வேலை செய்துவருகிறார்.

அங்கு அவருக்கு யாரும் பாதுகாப்புகள் வழங்குவதில்லை. சாதாரண ஒரு குடிமகனைப் போலவே உள்ளார்.

நோயாளிகளும் மிகவும் எளிதாக அவரை அணுகி தங்களின் நோய் தொடர்பில் ஆலோசனை பெறுகின்றனர்.

ஷெரிங் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் வங்கதேசம், ஜப்பான், அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று மருத்துவராகப் பயிற்சி பெற்றவர்.

2013-ம் ஆண்டு அரசியலுக்கு வந்த பின்னர் அவர் இருந்த கட்சி தோற்றுவிட்டது. இருந்தாலும் பூடான் மன்னர், ஷெரிங்கை அழைத்து அவர் தலைமையில் ஒரு மருத்துவக் குழுவை அமைத்து நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் படி அனுப்பிவைத்தார்.

ஷெரிங் தேர்தலில் போட்டியிடும் போது தேர்தல் உறுதி மொழியாக மருத்துவத்தை சிறந்து விளங்கச் செய்வேன் எனக் கூறியிருந்தார்.

தற்போது பிரதமரான பின்னர் வியாழக்கிழமைகள் தோறும் தேசிய மருத்துவமனையில் புதிய மருத்துவர்களுக்கு, அதிகாரிகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.

தம்மிடம் வரும் நோயாளிகளிடம் இருந்து ஷெரிங் பணம் ஏதும் ஈடாக்குவதில்லை என்ற போது, தாம் சாகும் வரை மருத்துவ சேவையை கைவிடுவதில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்