செல்பி எடுப்பதற்காக மின் ட்ரான்ஸ்பார்மரில் ஏறிய பெண்: அடையாளம் காண முடியாமல் போன பரிதாபம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் மிகச்சிறந்த செல்பி ஒன்றை எடுக்க வேண்டும் என்ற ஆசையில் மின் ட்ரான்ஸ்பார்மரின் மீது ஏறிய பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிருடன் எரிந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாஸ்கோவுக்கு 50 மைல் தொலைவில் அமைந்திருக்கும் Kuznetsy என்ற கிராமத்தில் உள்ள மின் விநியோக நிலையம் ஒன்றின் அருகே செல்பி எடுக்க பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் கிடைக்க, அதன் அருகில் அந்த பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

செல்பி எடுப்பதற்காக ஒரு மின் ட்ரான்ஸ்பார்மரின் மீது அந்த பெண் ஏரியதைக் கண்ணால் கண்டதாக சிலர் தெரிவித்த நிலையில், அந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

அந்த பெண் மின்சாரம் தாக்கி, தீப்பற்றி எரிந்ததை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மிகச் சிறந்த செல்பி ஒன்றை எடுப்பதற்காக மின் ட்ரான்ஸ்பார்மரின் மீது ஏறிய அந்த பெண்ணுக்கு 18 வயதிலிருந்து 24 வயதிருக்கும் என்று அவரை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவர் மின் ட்ரான்ஸ்பார்மரின் மீது ஏறும்போது சிலர் அவரை தடுக்க முயன்றதாகவும், அந்த பெண் அவர்கள் சொன்னதை கேட்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். பொலிசார் இந்த கோர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்