பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மீது ஏறிய கரப்பான் பூச்சி: அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிஜோ டுடெர்டா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர் மீது கரப்பான் பூச்சி ஏறி, அவரை தொந்தரவு செய்தது.

மத்திய போஹோல் மாகாணத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி பேசிக் கொண்டிருந்த போது அவரது இடது தோள்பட்டை மீது கரப்பான் பூச்சி ஏறியது.

அவருடைய உதவியாளர் அதனை விரட்ட முயன்றார். ஆனால், அது ஜனாதிபதியின் தோள் மீது ஏறி இறங்கி விளையாடியது.

உடனடியாக சுதாகரித்துக் கொண்ட ஜனாதிபதி, உதவியாளரை அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு தானே கரப்பான் பூச்சியை விரட்டியடித்தார்.

இவ்வளவும் சாதாரண விடயம்தான். ஆனால் பிறகு கூலாக மீண்டும் தனது உரையைத் தொடங்கிய ஜனாதிபதி, இப்படி பூச்சிகளை அனுப்பியிருப்பது நிச்சயம் முக்கியமான எதிர்க்கட்சியான லிபெரல் கட்சியின் சதிச் செயலாகத்தான் இருக்கும் என்று நகைச்சுவையாகக் கூறி உரையை தொடர்ந்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers