உலகின் சிறந்த டாப் 10 விமானநிலையங்கள்- மோசமான விமான ஏர்லைன்ஸ் எது தெரியுமா? வெளியான முழுத்தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகின் தலைசிறந்த ஏர்லைன்ஸ், மோசமான ஏர்லைன்ஸ் மற்றும் டாப் 10 சிறந்த விமானநிலையங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தலைசிறந்த ஏர்லைன்ஸ், மோசமான ஏர்லைன்ஸ் மற்றும் சிறந்த விமானநிலையங்களின் பட்டியல் வெளியாகும்.

அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் முதல் இடத்திலும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 2-வது இடத்தையும், ஏரோமெக்சிகோ ஏர்லைன்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதே போன்று சிறந்த விமானநிலையங்களுக்கான வரிசையில் முதல் இடத்தில் Hamad சர்வதேச விமாநிலையமும், இரண்டாம் இடத்தில் Tokyo சர்வதேச விமானநிலையமும், மூன்றாம் இடத்தில் Athens சர்வதேச விமானநிலையமும் உள்ளது.

இதை AirHelp நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஏர்லைன்சின் உணவும், புக்கிங் செய்தபின் மீண்டும் ரத்து செய்து அதற்கான பணத்தை திருப்பி கொடுப்பது போன்றவையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி 72 ஏர்லைன்ஸ் நிறுவனம், 132 விமானநிலையத்தின் தரவரிசை வெளியிட்டிருப்பதாகவும், இது 40,000 பேரிடம் கேட்ட கருத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மோசமான ஏர்லைன்சில் Thomas Cook 72-வது இடத்திலும், EasyJet 71-வது இடத்திலும், Kuwait Airways 70-வது இடத்திலும் உள்ளது.

அதே சமயம் மோசமான விமானநிலையங்களின் பட்டியலில் போர்ச்சுகலில் இருக்கும் Lisbon Portela விமானநிலையம் 132-வது இடத்திலும், Kuwait சர்வதேச விமானநிலையம் 131-வது இடத்திலும், Eindhoven 130-வது இடத்திலும் உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers