அடங்காத வடகொரியா! மீண்டும் ஏவுகணை சோதனை

Report Print Basu in ஏனைய நாடுகள்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரியா இராணுவம் கூறியுள்ளது.

கடந்த ஐந்து நாட்கள் வடகொரியா இரண்டாவது முறையாக ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரியா தரப்பில் கூறப்படுகிறது.

குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்த சில தினங்களுக்கு பின்னர் அடையாளம் காணமுடியாத ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென் கொரியா இராணுவம் கூறியுள்ளது.

சுமார் 420 கி.மீ சுற்றுவட்டாரத்தில் இந்த ஏவுகணை பறந்ததாக தென் கொரியா அதிகாரி தெரிவித்துள்ளார்.

வடகொரியா அதிபர் கிம்முடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் பெரிய அளவு உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...