கட்டுப்பாட்டை இழந்த விமானம்... மூன்றாக உடைந்து விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய 33 பயணிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மியான்மரின் யாங்கூன் சர்வதேச விமான நிலையத்தில் தனியார் பயணிகள் விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மூன்றாக உடைந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யாங்கூன் சர்வதேச விமான நிலையத்தில் தனியாருக்கு சொந்தமான Biman Airlines விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.

ஆனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடியுள்ளது.

இதில் விமானத்தின் இரு இறக்கைகளும் உடைந்துள்ளது. மட்டுமின்றி விமானமும் மூன்று பாகங்களாக உடைந்துள்ளது.

அதிரவைக்கும் இச்சம்பவத்தில் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் 33 பேரில் 4 பேர் காயமடைந்ததாக Biman Airlines நிறுவன அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய அந்த விமானமானது வங்கதேசத்தின் டாக்கா Srahjalal சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மியான்மருக்கு சென்றுள்ளது.

மியான்மரில் தரையிறங்கும் நேரம் வானிலை மிக மோசமாக இருந்தது எனவும் Biman விமான சேவை நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இந்த Biman Airlines கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனாலும், கடந்த 10 ஆண்டுகளில் குறித்த நிறுவனத்தின் விமானங்கள் எந்த விபத்திலும் சிக்கவில்லை என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கையில் விபத்தில் சிக்கி நெருப்பு கோளமாக மாறியதில் 41 பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers