கணவர் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்த மனைவி... 8 வருடம் கழித்து உயிரோடு வந்த கணவன்... வெளியான உண்மை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அமெரிக்காவில் பிறந்து Moldova நாட்டில் வசித்து வந்த நபர் காப்பீடு பணத்துக்காக உயிரிழந்ததாக நடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இகோர் (54) என்பவர் தனது மனைவி இரினா மற்றும் மகன் அல்கன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த 2010-ல் இகோர் காப்பீடு திட்டத்தில் இணைந்தார், இதன்பின்னர் சில மாதங்களில் இகோரும், இரினாவும் பிரிந்தனர்.

இதன் பின்னர் 2011-ல் அமெரிக்காவில் இருந்து Moldova நாட்டுக்கு இகோர் சென்றுவிட்டார்.

இதை தொடர்ந்து சில மாதங்கள் கழித்து அழுகிய நிலையில் சடலத்தை பொலிசார் கண்டுபிடித்த நிலையில் அது இகோரின் சடலமா என அவர் முன்னாள் மனைவி இரினாவை அடையாளம் காட்ட சொன்னார்கள்.

அந்த சடலத்தின் சட்டை பாக்கெட்டில் இகோரின் பாஸ்போர்ட் மற்றும் இதர ஆவணங்கள் இருந்த நிலையில் அது இகோரின் சடலம் தான் என இரினா கூறினார்.

இதன்பின்னர் அந்த சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்தார்.

அடுத்த ஆண்டு 2012ல் இகோருக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டு தொகையான $2 மில்லியனை காப்பீட்டு நிறுவனம் அவரின் முன்னாள் மனைவியான இரினாவிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தான் அதிகாரி ஒருவர் கடந்த 2013-ல் இகோரை Moldova நாட்டில் பார்த்துள்ளார்.

உயிரிழந்தவர் உயிரோடு வலம் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் அதிகாரி.

இது குறித்து விசாரணையில் இகோர், நிகோலி என்ற வேறு பெயருடன் அங்கு வசித்து வந்தது தெரியவந்தது.

இதையறிந்த இகோர் உஷாராகி தலைமறைவானார். இந்நிலையில் கடந்தாண்டு அமெரிக்காவுக்கு அவர் வந்த போது பொலிசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் $2 மில்லியன் காப்பீட்டு தொகைக்காக இகோர் இறந்தது போல நடித்ததும் அதற்கு இரினாவும், அல்கனும் உதவியதும் தெரியவந்தது.

இது தொடர்பான நீதிமன்ற வழக்கில் இரினாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அல்கனுக்கு 3 ஆண்டுகள் நன்னடத்தைக்கான தகுதி சோதனையும் நடத்த உத்தரவிடப்பட்டது.

முக்கிய குற்றவாளியான இகோருக்கு ஜூலை 29ஆம் திகதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்