ஆக்டோபஸுடன் வீடியோ எடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கதி...சிலிர்க்க வைக்கும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

சீனாவை சேர்ந்த பெண் ஒருவரின் முகத்தை ஆக்டோபஸ் உறிஞ்சி இழுக்கும் சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணே குறித்த காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் "seaside girl Little Seven" என்ற பெயரில் பிரபலமாக திகழ்ந்து வரும் பெண், அடுத்த பதிவில் குறித்த உயிரினத்தை சாப்பிட விரும்புவதாக கூறியுள்ளார்.

பெண் வெளியிட்ட வீடியோவில், பெண்ணின் முகத்தை தனது கால்களால் பிடித்துக்கொண்ட ஆக்டோபஸ், மெதுவாக உறிஞ்சி இழுக்கிறது.

முதலில் ஆக்டோபஸின் கால்களை எடுக்க முயலும் பெண், சிறிது நேரத்தில் வலி தாங்க முடியாமல் கதறி துடிக்கிறார்.

இறுதியில் ஆக்டோபஸை முகத்திலிருந்து இழுத்து எடுத்த பெண், தனது முகத்திலிருந்து வரும் இரத்தத்தை கண்டு அதிர்ச்சியடைகிறார்.

இந்த வீடியோவை இணையத்தில் கண்ட பலர் பெண்ணிற்கு எதிராகவும், ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers