கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கிய விமானம்: பயணிகள் அனைவரும் பலி!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மெக்ஸிக்கோ நாட்டின் Coahuila பகுதியில் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 14 பேர் மரணமடைந்துள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியை கண்டுகளித்துவிட்டு திரும்பும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதில் பயணம் செய்த 14 மெக்ஸிக்கோ நாட்டவர்களும் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக அவசர உதவிக்குழுக்கள் தீவிர நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.

ரஷ்யாவில் விமானம் ஒன்று தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 2 சிறார்கள் உள்ளிட்ட 41 பேர் உடல் கருகி பலியான சம்பவம் உலக அரங்கை உலுக்கியுள்ள நிலையில் தற்போது மெக்ஸிக்கோ விமான விபத்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...