பற்றியெரிந்த ரஷ்ய விமானத்தில் 41 பேர் பலியாக காரணமானவர் இவரா? வெளியான தகவலால் அதிர்ச்சி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பற்றியெரிந்த விமானத்தில் பயணி ஒருவர் வழிமறித்ததே 41 பேர் மரணமடைய காரணம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கும் போது, ஏற்பட்ட விபத்தில் 41 பேர் உடல் கருகி பலியாகினர்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர் மாஸ்கான் என்ற இடத்திற்கு சூப்பர் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது.

இந்த விமானத்தில் 73 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 78 பேர் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக விமானநிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே விமானம் தரையிறங்கும் போது எதிர்பாரத விதமாக தீ பிடித்து எரிந்தது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 37 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இருப்பினும் 41 பேர் உடல் கருகி பலியாகினர். இதில் Dmitry Khlebushkin என்ற ரஷ்ய பயணி தமது பைகளை எடுப்பதற்காக தாமதமானதால் எஞ்சிய பயணிகள் வெளியேற முடியாமல் தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாகவே உயிரிழப்பு அதிகரித்ததாக தற்போது அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

அவசர வேளைகளில் விமான பயணிகள் தங்கள் பைகளை விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த நபர் அந்த விதியை மீறியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் பலியான குடும்பத்தினர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers