தன்னுயிரை கொடுத்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமான உழியர்... முதல் பயணமே கடைசியாக மாறிய சோகம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பயணிகள் விமானம் தீயில் முற்றிலுமாக நாசமாகியுள்ள நிலையில், அந்த விமானத்தில் இருந்த ஊழியர் பயணிகளை காப்பாற்ற முயன்று தன்னுடைய உயிரை விட்டுள்ளார்.

தலைநகர் மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட Sukhoi Superjet 100 என்ற பயணிகள் விமானம் அவரசமாக ஓடுதளத்தில் தரையிரங்கும் போது, திடீரென்று விமானத்தின் பின்புறத்தில் பற்றிய தீயால் இரண்டு குழந்தைகள், ஒரு விமான ஊழியர் என 41 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்தின் போது பணிப் பெண் ஒருவர் ஹீரோ போன்று செயல்பட்டு பயணிகள் பலரின் உயிரைக் காப்பாற்றியது தொடர்பான செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த விபத்தின் போது ஊழியரான Maxim Moiseev பயணிகள் உயிர்பிழைப்பதற்காக உதவிய நிலையில், அவர் பரிதாபமாக தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து இந்த சம்பவத்தைக் கண்ட அங்கிருந்தவர்கள் கூறுகையில், Maxim Moiseev விமானத்தின் பின்புறம் இருந்த பயணிகளை காப்பாற்றுவதற்காக உதவி செய்து கொண்டிருந்தார்.

ஆனால் கடைசியில் அவர் தீயில் மாட்டிக் கொண்டு இறந்துவிட்டார். இது தான் அவர் விமானத்தில் ஊழியராக சேர்ந்த முதல் பயணம், எனவும் அதுவே அவருக்கு கடைசி பயணமாக மாறிவிட்டதாக அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers