விமானத்தில் சிக்கிய பயணிகளை காப்பாற்ற ஹீரோவாக மாறிய பணிப் பெண்... 41 பேரை பலிவாங்கிய விமான விபத்தின் கடைசி நிமிடம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் 41 பேர் பரிதாபமாக இறந்த நிலையில், அதில் ஹீரோ போல் பணிப் பெண் ஒருவர் பயணிகள் சிலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து மர்மேந்ஸ்க் நகருக்கு புறப்பட்டு சென்ற Sukhoi Superjet என்ற பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக தரையிறக்கப்பட்டது.

ஆனால் விமானம் தரையிறங்கிய போது, திடீரென்று விமானத்தின் பின்புறத்தில் தீ பிடித்ததால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியுள்ளனர்.

இதனால் 78 பேர் இருந்த அந்த விமானத்தில் 41 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர். இதில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு விமான ஊழியரும் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த விபத்தின் போது பணிப்பெண்ணான Tatyana Kasatkina(34), விமானத்தின் அவசர வழியை உடைத்து பயணிகளை உடனடியாக வெளியேறும் படி அறிவுறுத்தியதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதில் Tatyana Kasatkina விமானம் அவசரமாக தரையிரக்கபட்டவுடன் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறும் படி கூறப்பட்டது.

பயணிகளின் ஜன்னல் வழியே தீ தெரிந்ததால், பயணிகள் அனைவரும் தீ.. தீ என்று கத்தினர். ஆனால் விமானத்தின் உள்ளே தீ பற்றவில்லை, இதனால் பயணிகளை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்று யோசித்த போது, நான் அவசர வழியின் கதவை தன்னுடைய காலால் உடைத்து பயணிகளை வேகமாக வெளியேறும் படி கூறினேன்.

சொல்லப்போனால் பயணிகளை வெளியில் தள்ளிவிட்டேன் என்று கூட கூறலாம், தீயினால் விமானத்தின் உள்ளே கருப்பாக புகை மண்டலம் சூழ்ந்தது.

இருப்பினும் தன்னால் முடிந்த அளவிற்கு பயணிகளை வெளியேற்றினேன். எனக்கு தெரிந்தவரை விமானம் தரையிரங்கும் போது, பயங்கரமாக ஒரு இடி சத்தம் கேட்டது, அது தாக்கியதால் தான் தீ விபத்து ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஒன்றை கூறியுள்ளார்.

மேலும் அந்த இடி தாக்கியதால் விமானத்தின் விமானிக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் விமானி அதை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்க தெரிவிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers