இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில் வெளியாகியுள்ள சர்ச்சை வீடியோ!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் இஸ்லாமிய சிறுவர்கள் தலைகளை வெட்டுவதைக் குறித்தும் Al-Aqsa மசூதியை விடுவிப்பதைக் குறித்தும் பாலஸ்தீனியத்தை காப்பதற்காக தங்கள் உடல்களை அர்ப்பணிப்பதைக் குறித்தும் பாடுகிறார்கள்.

தங்கள் எதிராளிகள் மீதான வெறுப்பைக் காட்டும் விதத்தில் அந்த வீடியோ அமைந்துள்ளது.

பிலதெல்பியாவிலுள்ள இஸ்லாமிய அமெரிக்க சமூகத்தின் இஸ்லாமிய மையம், முகநூலில் சென்ற மாதம் பதிவேற்றம் செய்த அந்த வீடியோவில், இஸ்லாமிய பாரம்பரிய உடை அணிந்த சிறுவர் சிறுமியர் வெறுப்புப் பாடல்களை பாடுவதோடு உரையும் ஆற்றுகிறார்கள்.

பாலஸ்தீனியத்தை எங்கள் உடல்களைக் கொடுத்தும் காப்போம், எந்த தயக்கமுமின்றி எங்கள் ஆன்மாக்களையும் தியாகம் செய்வோம் என்று ஒரு சிறுமி பாட, இன்னொரு பெண் அவர்கள் தலைகளை வெட்டுவோம், Al-Aqsa மசூதியை விடுவிப்போம் என்கிறாள்.

முன்னணி யூத அமைப்பான The Anti-Defamation League, அந்த வீடியோ மிகவும் பயங்கரமானதாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கு வெறுப்பை கற்றுக் கொடுக்கக் கூடாது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சிறுவர்கள் இத்தகைய வெறுப்புரைகள் ஆற்றவோ யூதர்களுக்கெதிரான மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கெதிரான பாடல்களுக்கு உதடசைக்கவோ நடனம் ஆடவோ கேட்டுக் கொள்ளப்படக்கூடாது என அது கூறியுள்ளது.

இஸ்ரேல் நாட்டவர்களுக்கும் பாலஸ்தீனிய நாட்டவர்களுக்கும் உள்ள பிரச்சினை மிகவும் சிக்கலான ஒன்று, அது இருநாட்டவர்களுக்கும் வேதனையைக் கொடுக்கக்கூடியது.

அப்படியிருக்கும்போது, நமது பிள்ளைகளுக்கு சமாதானத்தை பின்தொடரும்படி கற்றுக் கொடுப்பது மட்டுமே அமைதியான ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் என்றும் The Anti-Defamation League கூறியுள்ளது.

இதற்கிடையில் இஸ்லாமிய அமெரிக்க சமூகம் என்னும் அமைப்பு அந்த வீடியோ குறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த குறிப்பிட்ட நிகழ்வுக்கு காரணமான நபர் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers