வெளிநாட்டில் பரவும் கொடூர தொற்றுநோய்: வெளியேற முடியாமல் தவிக்கும் மேற்கத்திய சுற்றுலா பயணிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உயிர் கொல்லும் கொடூர நோய் தொற்று காரணமாக மேற்கத்திய சுற்றுலா பயணிகள் சிலர் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.

குறித்த சுற்றுலா பயணிகள் யார் என்பது தொடர்பில் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

மங்கோலியா நாட்டின் உகிலி கிராமத்தில் கொடூரமான நோய் தொற்று பரவுவதாக எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் அவரது கர்ப்பிணி மனைவியும் அந்த நோய் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த நோய் தொற்று பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உகிலி கிராமப் பகுதியில் இருந்து இது பரவுவதால் அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெளியாட்களை உள்ளே அனுமதிக்கவோ, அங்கிருந்து எவரும் வெளியேறவோ நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையிலேயே அந்த கிராமத்தில் மேற்கத்திய சுற்றுலா பயணிகள் சிக்குண்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிக்குண்ட பயணிகள் அனைவரும், அமெரிக்கா, நெதர்லாந்து, ஜேர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் தென் கொரியா நாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

நோய் பரவும் ஆபத்து இருப்பதால் அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்த நிலையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

அங்குள்ள ஹொட்டல் ஒன்றில் தற்போது அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மே 6 ஆம் திகதி வரை காத்திருக்கவும், அதன் பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers