இலங்கை குண்டுவெடிப்பில் பலியான சகோதரர்கள் மூவருக்கும் ஒன்றாக நல்லடக்கம்: பொதுமக்கள் அஞ்சலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈஸ்டர் நாள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட தமது 3 பிள்ளைகளுக்கும் ஸ்காட்லாந்து கோடீஸ்வரர் இன்று ஒன்றாக நல்லட்டக்கம் செய்து வைத்துள்ளார்.

டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பேராலயத்தில் நடைபெற்ற ஆடம்பர ஆராதானைகளின் இறுதியில் Asos கோடீஸ்வரரின் 3 பிள்ளைகளான ஆல்ஃபிரெட், ஆல்மா மற்றும் ஆக்னஸ் ஆகியோர் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.

இந்த ஆராதனைகளின் டென்மார்க்கின் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் லார்ஸ் லோகே ரஸ்முசென் உள்ளிட்ட பல நூறு பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள ஷாங்கிரி லா ஹொட்டலில் கடந்த மாதம் குடும்பத்துடன் தங்கியிருந்துள்ளார் Asos கோடீஸ்வரரான ஆண்டர்ஸ் ஹோஷ் போவ்ஸ்ஸென்(46).

ஈஸ்டர் நாளில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதியான ஜஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான கொலைவெறி கும்பல் முன்னெடுத்த தற்கொலை தாக்குதலில் போவ்ஸ்ஸென் தமது 3 பிள்ளைகளை இழந்தார்.

இதில் போவ்ஸ்ஸெனின் நாலாவது பிள்ளை நூலிழையில் உயிர் தப்பியுள்ள்ளது. காயமுடன் தப்பிய அவர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இன்றைய இறுதி அஞ்சலி நிகழ்வில் சுமார் 700 பேர் கலந்துகொண்டுள்ளனர். முன்னதாக தமது பிள்ளைகளின் நினைவாக ஸ்காட்லாந்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார மையம் ஒன்றை நிறுவ போவ்ஸ்ஸென் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ்வின் ஒருபகுதியாக தற்கொலை தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய போவ்ஸ்ஸெனின் இன்னொரு மகள் ஆச்ட்ரிட் தமது சகோதரர்களின் நினைவாக பலூன்களை பறக்க விட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers