உலகின் மிகவும் இளம் வயது தாய் இவர்தான்: தந்தை?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஐந்து வயதில் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்தான் இன்றுவரை உலகின் மிக இளவயது தாயாக கருதப்படுகிறார்.

Lina Medina, ஐந்து வயதாக இருக்கும்போது அவளது வயிறு இயற்கைக்கு மாறான அளவுக்கு வீங்கியிருப்பதையும் அவ்வப்போது தனக்கு வயிறு வலி ஏற்படுவதாகவும் கூறியதையடுத்து அவரது தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

மருத்துவமனையில் Linaவை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றனர்.

பின்னர்தான் Linaவின் தாய், அவள் மூன்று வயதிலேயே பருவம் அடைந்ததைக் குறித்து தெரிவித்திருக்கிறார்.

சில வாரங்களுக்குப்பின் Lina ஆரோக்கியமான ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தாள். குழந்தையை பிரசவிக்கும் அளவிற்கு அவளது இடுப்பெலும்பு வலிமையாக இல்லாததால், அறுவை சிகிச்சை முறையில்தான் அவளது குழந்தை பிரசவிக்கப்பட்டது.

அப்போதுதான் மருத்துவர்கள் Linaவின் உடல், வளர்ந்த ஒரு பெண்ணின் உடல் பாகங்களைக் கொண்டிருப்பதைக் கவனித்தார்கள்.

அவளுக்கு precocious puberty என்னும் பிரச்சினை காரணமாகவே, அவள் மிகவும் இள வயதிலேயே பருவம் அடைந்ததும் தெரியவந்தது.

அவளை பாலியல் வன்புணர்வு செய்ததாக சந்தேகத்தின் பேரில் Linaவின் தந்தையே கைது செய்யப்பட்டாலும், ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இன்றுவரை Linaவின் குழந்தைக்கு தந்தை யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. Linaவின் மகனான Gerardo 40 வயது வரை வாழ்ந்தார், பின்னர் எலும்பு நோய் ஒன்றின் காரணமாக அவர் உயிரிழந்தார்.

இன்று 85 வயதாகும் Lina, பெருவில்தான் வசிக்கிறார், இன்று வரை உலகின் மிக இளவயது தாய் என்ற பெயர் அவருக்கு மட்டும்தான்!

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers