ஷமீமா பேகம் பங்களாதேஷுக்கு வந்தால் தூக்கிலிடப்படுவார்: வெளியுறவு அமைச்சர் அதிரடி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஷமீமா பேகத்திற்கும் பங்களாதேஷிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும், அவர் பங்களாதேஷுக்கு வந்தால், நாட்டின் சட்டப்படி தூக்கிலிடப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்.

பிரித்தானியாவிலிருந்து தப்பியோடி சிரியா சென்று தீவிரவாதிகள் கூட்டத்தில் சேர்ந்த மாணவியாகிய ஷமீமா பேகம் (19), திடீரென ஒரு நாள் குழந்தையுடன் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் பிரித்தானியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவிக்க, பிரித்தானிய உள்துறைச் செயலரான சஜித் ஜாவித், ஷமீமாவுக்கு ஏற்கனவே பங்களாதேஷ் குடியுரிமை இருப்பதாக கூறி, அவரது பிரித்தானிய குடியுரிமையை பறித்தார்.

இதற்கிடையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சரான Abdul Momen, தங்கள் அரசுக்கும் ஷமீமா பேகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

ஷமீமா பேகம் பங்களாதேஷ் குடிமகள் அல்ல என்று தெரிவித்த Abdul Momen, அவர் ஒருபோதும் பங்களாதேஷ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

பங்களாதேஷைப் பொருத்தவரையில், யாராவது தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தால், எங்களுக்கு ஒரே எளிமையான சட்டம்தான், அது தூக்கு தண்டனை அவ்வளவுதான் என்றார் Abdul Momen.

ஷமீமா பங்களாதேஷுக்கு வந்தால், அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிவித்த Abdul Momen, தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கு தன் நாடு மரண தண்டனை விதிக்கும் என்று எச்சரித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers