நேரலை நிகழ்ச்சியில் மலைப்பாம்புடன் ஒரு வேடிக்கை..... நொடிப்பொழுதில் உயிரிழந்த இளைஞர்: அதிர்ச்சி வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் Dagestan என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் மலைப்பாம்பை வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த போது கழுத்து இறுக்கி உயிரிழந்துள்ளார்.

சிறிய அளவிலான சர்க்கஸை நடத்திய வந்த இளைஞர் மேடையில் நின்றுகொண்டு மலைப்பாம்பினை தனது உடலில் சுற்றிக்கொண்டு வேடிக்கை காட்டியுள்ளார்.

இதனை கீழே இருந்த குழந்தைகள் உட்பட பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, இளைஞரின் உடலை இறுக்கிய மலைப்பாம்பு அடுத்தபடியாக கழுத்தை இறுக்கியது.

மலைப்பாம்பு கழுத்தை இறுக்கியவுடன் அதிலிருந்து மீளமுடியாத இளைஞர் நொடிப்பொழுதில் தரையில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதனை பார்வையாளர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, Dagestan பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், இப்படி ஒரு சம்பவம் எங்கள் பகுதியில் நடந்ததாக எவ்வித பதிவும் இல்லை என பொலிசார் மறுத்துள்ளனர்.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers