இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலால் புர்காவுக்கு தடை... இதற்கு முன் எந்தெந்த நாடுகளில் தடை உள்ளது தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலால் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதை இலங்கை அரசு சமீபத்தில் தடை செய்ததை தொடர்ந்து எந்தெந்த நாட்டில் புர்கா அணிய தடை செய்யப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

ஐரோப்பா

இந்த தடை முதன் முதலில் பிரான்சில் தான் கொண்டுவரப்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டு முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.

இதனை ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றமும் 2014-ஆம் ஆண்டு ஜூலையில் உறுதி செய்தது .பின்

டென்மார்க்

2018 ஆகஸ்ட் மாதம், டென்மார்க்கில் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக அந்த நாட்டில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது.

டென்மார்க் சட்டப்படி முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிந்தால், 157 டாலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அதே குற்றத்தை செய்தால் அபராத தொகை பத்து மடங்கு உயரும் எனபது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து

2018-ஆம் ஆண்டு ஜீன் மாதம் முகத்தை முழுமையாக மூடி அடை அணிவதை அந்நாடு அரசு தடை செய்தது. பொது வீதிகளில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணியலாம். ஆனால்,பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது முகத்தை மூடி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி

ஜெர்மனியை பொறுத்தவரையில் கார்களை இயக்கும் போது முகத்தை மூடி செல்ல அனுமதி இல்லை.

ஆஸ்திரியா

ஆஸ்திரியாவில் அக்டோபர் 2017-ஆம் ஆண்டு முதல் பள்ளிகள், நீதிமன்றங்களில் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

பெல்ஜியம்

ஜூலை 2011-ஆம் ஆண்டு முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. பெல்ஜியம் சட்டப்படி பொது இடங்களான பூங்காக்கள் மற்றும் வீதிகளில் முகத்தை மூடி ஆடை அணிய கூடாது.

நார்வே

ஜூன் 2018-ஆம் ஆண்டு கல்வி நிலையங்களில் மட்டும் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா இயற்றப்பட்டது.

பல்கேரியா

நாடாளுமன்றம் முகத்தை மூடி ஆடை அணியும் பெண்களுக்கு சலுகைகளை ரத்து செய்யும் சட்டத்தை இயற்றியது.

ஆப்ரிக்கா

2015-ஆம் ஆண்டு முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிந்த பெண்களால் மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து சாட், கெபோன், கேமரூனின் வடக்கு பகுதி, நைஜரின் டிபா பகுதி மற்றும் காங்கோ குடியரசில் முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.

அல்ஜீரியாவில் அரசு ஊழியர்கள் முகத்தை முழுமையாக மூடுவது அக்டோபர் 2018-இல் தடை செய்யப்பட்டது.

சீனா

சீனாவில் சின்ஜியாங்கில் பொது இடங்களில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவது, நீளமாக தாடி வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்