சாலையை விட்டு விலகி கவிழ்ந்த சொகுசு பேருந்து.. 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் சொகுசு பஸ் சாலையில் இருந்து விலகி, பக்கவாட்டில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியாகினர்.

மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் சொகுசு பேருந்து ஒன்று டோர்ரியோன் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. குறித்த பேருந்து ஜகட்டெகஸ் நகராட்சிக்கு உட்பட்ட சாலையின் ஒரு குறுகிய வளைவில் திரும்பியது.

அப்போது திடீரென குறித்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையை விட்டு விலகி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் சுமார் 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக, அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

EPA

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers