கருக்கலைப்பு செய்த பின்னர் திருமணத்திற்கு வாருங்கள்... கர்ப்பிணியிடம் மணப்பெண்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கர்ப்பிணியான தோழியை திருமணத்திற்கு வர வேண்டும் எனில் கருக்கலைப்பு செய்துவிட்டு வாருங்கள் என மணப்பெண்ணே துரத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடு ஒன்றில் தமது தோழியின் திருமணத்திற்கு இளம்பெண் ஒருவர் மணப்பெண் தோழியாக செல்ல தயாராகி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த இனிப்பான தகவல் வந்துள்ளது. தாம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த குறித்த பெண், உடனடியாக திருமணம் செய்து கொள்ள இருக்கும் தமது நெருங்கிய தோழியை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த தோழியின் பதில் இவருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கர்ப்பிணியான நிலையில் மணப்பெண் தோழியர்களுக்கான உடை அணிந்தால் அது பார்ப்பது வடிவாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தமது திருமணமானது விருந்தினர்கள் அதிகம் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகும், இதில் கர்ப்பிணிகள் கலந்துகொண்டால் அது மிகுந்த மன உளைச்சலுக்கு வழிவகுக்கும்.

திருமணத்திற்கு கட்டாயம் வருவதாக இருந்தால், கருவை கலைத்துவிட்டு வந்தால் போதும் எனவும் அந்த மணப்பெண் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பல மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, இறுதியில் இனி கர்ப்பிணியாவது கடினம் என விதி எழுதப்பட்ட தமக்கு, கடவுளே நேரில் வந்து வரமாக அளித்தது என கருதி இருந்த நிலையில்,

தமது தோழி காட்டமாக பதிலளித்திருப்பது உண்மையில் மன வேதனையை அளிப்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.

பேஸ்புக்கில் தமக்கு நேர்ந்த நிலை தொடர்பில் பதிவு செய்துள்ள அந்த பெண்மணி குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில்,

பலபேர் இச்சம்பவத்திற்கு கணிசமான பதிலை பதிவு செய்து வருகின்றனர். மட்டுமின்றி இந்த சம்பவம் உண்மையா எனவும் சில கேள்வி கேட்டுள்ளனர்.

வாழ்க்கையில் இனி கருவுறுவது கடினம் என இருந்த நிலையில், தாம் கர்ப்பமானது தமது தோழிக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும் என கருதியே அவர் பகிர்ந்துள்ளார். ஆனால் அவரது கொடூர முகம் இந்த விடயத்தில் வெளிப்பட்டுள்ளது என சிலர் பதிவிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்