வாழ்க்கையில் இனி அந்த விடயம் நடக்குமா என்பது தெரியவில்லை: குமுறும் இளம்பெண்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இத்தாலியின் கடற்கரை நகரம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் தாம் அழகாக இருப்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக முயன்றும் வேலை கிடைக்கவில்லை என குமுறி வருகிறார்.

இத்தாலியின் கடற்கரை நகரம் Fano. இப்பகுதியில் குடியிருந்து வருபவர் ஆலிஸ் சால்டி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக அங்குள்ள மீட்பு படையில் இணைய முயன்று வருகிறார்.

ஆனால் ஒவ்வொருமுறையும் ஏமாற்றமே மிஞ்சியதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி தாம் பெண் என்பதாலும், மிகவும் அழகாக இருப்பதாலும் மீட்பு படையில் தம்மை சேர்த்துக்கொள்ள மறுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உண்மையில் இது பாலின பாகுபாடு என காட்டமாக தெரிவித்துள்ள அவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தாம் மீட்பு படைகளுக்கான அனைத்துவிதமான பயிற்சியும் முடித்துள்ளதாகவும்,

அப்போது முதலில் இருந்தே குறித்த பணிக்கு முயற்சித்து வருவதாகவும், ஆனால் இதுவரை சாதகமான பதில் ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார் ஆலிஸ்.

மட்டுமின்றி சிலர் ஆபாசமாக கருத்துக்களையும் பதிலாக தந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்