ஹெலிகாப்டர்கள் மீது பயங்கரமாக மோதிய விமானம்.... நடந்தது என்ன? அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நேபாளத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாள நாட்டில் உள்ள சொலுகும்பு மாவட்டத்தில் டென்ஜிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையம் உள்ளது.

இங்கிருந்து சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு இமயமலை சுற்றிக் காண்பிக்கப்படும்.

இந்நிலையில் இன்று சுற்றுலா பயணிகள் யாரும் வராத நிலையில் சிறிய ரக விமானத்தை இயக்க விமானி தயாரானார்.

அதில் விமானி ரோகல்யா, துணை விமானி துங்கனா, உதவி சப் இன்ஸ்பெக்டர் ராம் பகதூர் கட்கா ஆகியோர் இருந்தனர்.

அப்போது திடீரென நிலை தடுமாறிய விமானம், அங்கு நின்றிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மீது பலமாக மோதியது.

இதில், விமானம் கடுமையாக சேதமடைந்தது. இதில் விமானத்தில் இருந்த துணை விமானி துங்கனா, உதவி சப் இன்ஸ்பெக்டர் ராம் பகதூர் கட்கா ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர்களில் இருந்த சேட் குருங்க், பாதுகாப்பு அதிகாரி, ஒரு விமானப்பணிப்பெண் உட்பட 5 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் அதிகாரிகளை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்