5 மனைவிகளோடு வாழும் கோடீஸ்வரர்.... மீண்டும் 18 வயது அழகிய பெண் மீது காதல்... முடிவில் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் ஏற்கனவே ஐந்து பெண்களை திருமணம் செய்து கொண்ட கோடீஸ்வரர் ஒருவர் ஆறாவதாக 18 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்தவர் நவாகோ (59) மிக பெரிய கோடீஸ்வரரான இவர் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார்.

நவாகோவுக்கு ஐந்து மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் ரிஜினா டேனியல்ஸ் (18) என்ற வளர்ந்து வரும் இளம் நடிகையை நவாகோ காதலித்து ஆறாவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நவாகோ கூறுகையில், பலரை திருமணம் செய்து கொள்வது எனது விருப்பம் என தெரிவித்தார்.

ஆனால் ரிஜினாவை மணந்தது தொடர்பாக கருத்து கூற அவர் மறுத்துவிட்டார்.

இதனிடையில் ரிஜினா சமீபத்தில் பல கோடி மதிப்புள்ள வீடுகளை வாங்கிதோடு அதிக விலைமதிப்புடைய காரை வாங்கினார்.

இது தான் சம்பாதித்த பணத்தில் வாங்கியதாக அவர் கூறினார். ஆனால் கோடீஸ்வரர் நவாகோவின் பண உதவியால் தான் அவர் வீடு மற்றும் காரை வாங்கியதாக கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்