நடுவானில் பலமுறை தலைகீழாக சுழன்று தரையில் விழுந்து நொறுங்கிய எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

157 பயணிகளுடன் விபத்தில் சிக்கிய எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானமானது நடுவானில் பலமுறை தலைகீழாக சுழன்று தரையில் விழுந்து நொறுங்கியதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமனமானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த 189 பேரும் பலியாகினர்.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் எத்தியோப்பியாவிலிருந்து புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானம், அடுத்த 6 நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 157 பேரும் இறந்தனர்.

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதேசமயம் 737 மேக்ஸ் ரக விமானங்கள் அனைத்து இயக்கப்படாமல் தரையிறக்கப்பட்டன. 300 விமானங்களின் பயணங்கள் இதனால் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் விபத்து ஏற்பட்டதற்கான அறிக்கையினை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் விபத்திற்கான காரணம் எதையும் முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கவில்லை. இந்த விமானப் பயணத்தின் விவரமான ஆய்வையும் இது வழங்கவில்லை. ஆனால் விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக பலமுறை நடுவானில் தலைகீழாக சுழன்றுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

விமான விபத்துகள் தொடர்பான அனைத்துலக விதிமுறைகளின்படி, ஆரம்பக்கட்ட அறிக்கை எந்தத் தரப்பு குற்றம் செய்தது என்று குறிப்பிட்டுக் கூறாது. இருந்தபோதும், விமானிகளிடம் தவறு இல்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. அத்துடன், விமானங்களை தயாரித்த போயிங் நிறுவனத்திற்கு சில பரிந்துரைகளும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போக்குவரத்து அமைச்சர் டக்மவித் மோகஸ், விமான உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் குழுவினர் செய்துள்ளனர். ஆனால் அவர்களால் விமானத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறியுள்ளார்.

போயிங் தலைமை நிர்வாக அதிகாரி டென்னிஸ் முய்லேன்பர்க் கூறுகையில், கடந்த சில மாதங்களில் 346 உயிர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்ததை நினைத்து வருந்துகிறோம். இந்த பெரிய நிறுவனத்துடன் என் வாழ்க்கையில் நிகழ்ந்த நெஞ்சை சுக்குநூறாக நொறுக்கிய இந்த நிகழ்வினை என்னால் நினைவுபடுத்தி கூட பார்க்கமுடியவில்லை.

MCAS ஆன்டி-ஸ்டால் மென்பொருளில் கோளாறு இருந்ததாக விமானிகள் எங்களிடம் கூறியுள்ளனர். அதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தவறை சரிசெய்வது எங்களுடைய பொறுப்பு. நாங்கள் அதை சொந்தமாக வைத்திருக்கிறோம். அதை எப்படி செய்வது என்று எங்களுக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers