சடலமாக கிடந்த தாய் மனிதகுரங்கு.... அதனிடம் தாய்பால் குடிக்க முயன்ற குட்டி.... பலரை கண்ணீரில் ஆழ்த்திய வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

காட்டில் இரண்டு மனிதகுரங்குகள் சடலமாக கிடந்த நிலையில் அதில் ஒன்றான தனது தாயிடம் இருந்து தாய்ப்பால் குடிக்க குட்டி முயன்ற வீடியோ மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான Rwanda-ல் உள்ள காடுகளுக்கு ஆய்வாளர்கள் சமீபத்தில் சென்றனர்.

அங்குள்ள மனித குரங்குகள் எந்தளவு ஒழுக்கமாக நடந்து கொள்கிறது என்பதை அறியவே ஆய்வாளர்கள் அங்கு சென்றார்கள்.

அப்போது ஒரு இடத்தில் டைடஸ் என்ற 35 வயதான ஆண் மனிதகுரங்கு இறந்து கிடந்தது, அதன் அருகிலேயே டக் என்ற 38 வயதான பெண் மனிதகுரங்கு சடலமாக கிடந்தது.

இந்த இரண்டு சடலங்களையும் அங்கிருந்த மனிதகுரங்குகள் சூழ்ந்து கொண்டதோடு, சடலங்களை வருடியும், நக்கியும் கொண்டிருந்தன.

இதன் மூலம் இறந்து கிடக்கும் மனிதகுரங்குகளுடன் நெருக்கமாக இருக்க மற்ற மனிதகுரங்குகள் விரும்புவதை ஆய்வாளர்கள் உணர்ந்தனர்.

அப்போது டைடஸ் மனிதகுரங்கு சடலத்துக்கு அருகில் ஆண் குரங்கு ஒன்று 2 நாட்களாக படுத்து கிடந்தது.

அதே போல சடலமாக கிடந்த டக் என்ற பெண் மனிதகுரங்கு அருகிலேயே இருந்த அதன் ஆண் குட்டி தனது தாயிடம் இருந்து தாய்ப்பால் குடிக்க முயன்றதையும் காணமுடிந்தது, இது குட்டியின் துயரத்தை உணர்த்தியது.

இது சம்மந்தமான வீடியோ வெளியாகி பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து ஆய்வாளர்கள் விடுத்த அறிக்கையில், ஆரோக்கியமான மனிதகுரங்குகளுக்கும், சடலங்களாக இருக்கும் மனிதகுரங்குகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் எபோலா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கலாம்.

இதுபோன்ற விடயம் மத்திய ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான மனிதகுரங்குகளை பாதித்து உயிரிழப்புகளையும் ஏற்பட செய்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...