குழந்தையின் உண்மையான தந்தை யார்? இறுதிவரை ஒப்புக்கொள்ளாத இரட்டை சகோதரர்கள்... முடிவில் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
387Shares

பிரேசிலில் ஒரு குழந்தைக்கு இரட்டையர்களான சகோதர்களில் ஒருவர் தான் தந்தை என்ற நிலையில் அது யார் என்பதை இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாததால் இவ்வழக்கில் நீதிமன்றம் வினோத தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கில் சம்மந்தப்பட்ட குழந்தைக்கு பணம் செலுத்துவதை தவிர்க்க அந்த இரட்டையர்களில் குழந்தையின் உண்மையான தந்தை தாமாக முன்வந்து உண்மையைக் கூறவில்லை.

இருவரும் இரட்டையர்கள் என்பதால் டிஎன்ஏ பரிசோதனையிலும் குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தனது தந்தை யார் என்று தெரிந்து கொள்ளும் அந்த குழந்தையின் உரிமையை அந்த இரட்டையர்கள் பறிக்கிறார்கள்.

இரட்டையர்கள் இருவரும் மாதம் தலா 60 அமெரிக்க டொலர்களை குழந்தைக்கு வழங்க வேண்டும் அல்லது பிரேஸிலின் குறைந்தபட்ச சம்பளத்தில் 30 சதவீதத்தை கொடுக்க வேண்டும்.

அதேபோல் அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இரட்டையர்கள் இருவரின் பெயரும் இருக்க வேண்டும்

தான் அந்த குழந்தையின் தந்தை என்பதை மறைக்க இரட்டையர்களில் ஒருவர் முயற்சி செய்கிறார். இம்மாதிரியான ஒரு மோசமான செயலை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளார்.

அந்த இரட்டையர்கள் ஒரே மாதிரியான தோற்றத்தை பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றியுள்ளனர். இதை வைத்தே இருவரும் அது தொடர்பான குற்றங்களில் இருந்து தப்பிக்கவும் முயன்றது தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...