157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: உயிரிழப்புக்கு என்ன காரணம்? வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

எத்தியோப்பியா '737' ரக போயிங் விமானம் கடந்த மாதம் மார்ச் 10 திகதி அடிஸ் அபாபா நகரில் இருந்து 17 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்ற அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்து விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

இதுவரை விமான விபத்திற்கான காரணம் குறித்து இரண்டு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தானியங்கி 'ஸ்டேபிலைசர்ஸ்' கருவிகள் விமானத்தின் மூக்குப்பகுதியை 10 வினாடிகளில் 2.7 டிகிரி செங்குத்தான கோணத்தில் தரையை நோக்கி திசை திருப்பும். ஆனால் இதன் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால், விமானியால் கட்டுப்படுத்த இயலாத காரணத்தால் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் தற்போது இந்த விபத்திற்கான காரணம் குறித்து மீண்டும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விமானம் புறப்படும்போது இறக்கை பகுதி சேதமடைந்துள்ளது , மேலும் சேதமடைந்த சென்சார் துல்லியமற்ற தரவை கொடுத்த விளைவால் எம்.சி.ஏ.எஸ். என்று அழைக்கப்படும் மென்பொருளை மாற்றியுள்ளனர். ஆனால் அது மீண்டும் சரிவர செயல்படாத காரணத்தால், விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்தபோது விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.

தற்போது, 157 பேருடன் எத்தியோப்பியா விமானம் விழுந்து நொறுங்கியதற்கு விமானத்தின் இறக்கை பகுதி சேதமடைந்தது தான் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers