விமானத்தில் நடுவானில் உயிருக்கு போராடிய இளம் பெண்..காப்பாற்ற போராடிய மருத்துவர்கள்! அதன் பின் நடந்த சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் பெண் விமானத்தில் மர்மமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த 34 வயது Aleisha Tracy என்ற பெண் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்சிலிருந்து, அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு Qantas நிறுவனத்தின் விமானத்தில் கடந்த ஞாயிற்று கிழமை வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது விமானத்தில் பயணித்திக் கொண்டிருந்த Aleisha Tracy திடீரென்று இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தில், Aleisha Tracy-ஐ காப்பாற்ற விமானத்தில் இருந்த இரண்டு மருத்துவர்கள் போராடியதாகவும், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று அந்த விமான நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது எப்படி நடந்து என்பது குறித்து தெரியவில்லை, இதனால் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பிரேத பரிசோதனையின் முடிவு வந்த பின்னரே எதுவும் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை நாட்களை கழிக்க சென்ற Aleisha Tracy இப்படி இறந்த நிலையில் திரும்பியிருப்பது அவரது ஒட்டு மொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உறவினர்கள்,Aleisha Tracy-க்கு எந்த ஒரு உடல் நல பாதிப்பும் இல்லை எனவும், அவளுடைய மரணத்திற்கான காரணம் தெரிந்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்