விமான விபத்தில் பலியான ரஷ்யாவின் பெரும் கோடீஸ்வரர்: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான நடாலியா ஜேர்மனியில் நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விமான விபத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட பொலிசார் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தென்மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ள குட்டி விமான நிலையத்தில் தரையிறங்கும் நிலையிலேயே அந்த ஒற்றை-இயந்திர விமானமானது விபத்தில் சிக்கியுள்ளது.

இதில், 55 வயதான நடாலியா ஃபிலேவா உள்ளிட்ட மூவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி பகல் 3.30 மணியளவில் இந்த விமான விபத்து நடந்துள்ளது. பிரான்சில் இருந்து விமானி உள்ளிட்ட மூவரும் ஜேர்மனி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

விமான விபத்தில் கொல்லப்பட்ட நடாலியாவின் மொத்த சொத்து மதிப்பு 500 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.

ரஷ்ய விமான சேவை நிறுவனமான எஸ்7 குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவர் நடாலியா.

ரஷ்ய நாட்டில் செயல்படும் தனியார் விமான சேவை நிறுவனங்களில் எஸ்7 இரண்டாவது இடத்தில் உள்ளது.

மட்டுமின்றி உலகின் 26 நாடுகளில் உள்ள 181 நகரங்களுக்கு எஸ்7 விமான சேவையை மேற்கொள்கிறது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என எஸ்7 நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே விமான விபத்தில் சிக்கிய மூவரின் உடலும் அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers