வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையை சேர்ந்த நபர்! அங்கேயே தகனம் செய்யப்பட்ட உடல்: வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

வங்கதேசத்தில் அலுவலக கட்டிட தீவிபத்தில் உயிரிழந்த இலங்கையரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள FR tower என்ற அலுவலக கட்டிடத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் தீவிபத்து ஏற்பட்டதில் 25 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் 74 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

100-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் இலங்கையை சேர்ந்த நிரோஸ் விக்னராஜா (35) என்பவரும் உயிரிழந்துள்ளார். அவர் தீவிபத்து ஏற்பட்ட FR tower-ல் உள்ள இலங்கை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

டாக்காவில் தனது தாய் அனுசரணி மற்றும் சகோதரர் இமயம் விக்னராஜா ஆகியோருடன் நிரோஸ் வசித்து வந்தார். அவரின் உடல் வங்கதேசத்தில் உள்ள Kamalapur நகரில் தகனம் செய்யப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers